ஆங்கில புத்தாண்டு 2025 - தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
09:36 AM Jan 01, 2025 IST | Murugesan M
2025 புத்தாண்டை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த நன்னாளில் உலகெங்கும் அமைதி திரும்பி, நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அனைவருக்கும் தனது உளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
Advertisement
Advertisement