ஆங்கில புத்தாண்டு - நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
04:52 PM Jan 01, 2025 IST | Murugesan M
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
2025 ஆண்டை வரவேற்று உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள், கோயில்களிலும் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி சென்னை நங்கநல்லூர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோயிலில் வீற்றிருக்கும் 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை, பக்தர்கள் தரிசித்தனர்.
Advertisement
ஆஞ்சநேயர் திருக்கோயிலில் பாஜக மாநில தொழில் பிரிவு தொழில் பிரிவு நிர்வாகி அனந்தராம கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ரேவதி அனந்தராம கிருஷ்ணன் ஆகியோர் வழிபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், சிறந்த தலைவராக நாட்டை பிரதமர் மோடி வழிநடத்துவதாக கூறினர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுக்கும் எல்லா முயற்சியும் பெரிய வெற்றி அடைய கடவுளிடம் வேண்டுதலை வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement