ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி - பிரதமர் மோடி வாழ்த்து!
03:05 PM Nov 21, 2024 IST | Murugesan M
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்று அபாரமான சாதனை படைத்த நமது ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Advertisement
அவர்கள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், இந்த வெற்றி வரவிருக்கும் பல விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement