ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து பயனில்லை! - தவெக தலைவர் விஜய்
10:05 AM Dec 30, 2024 IST | Murugesan M
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தாலும் எந்த பயனும் இல்லை என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பெண்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அவலங்களை கண்டு வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
பெண் குழந்தைகள், தங்கைகள், தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான பாதுகாப்பை யாரிடம் கேட்பது என கேள்வி எழுப்பிய விஜய், ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து எந்த பயனுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் உறுதியக நிற்பேன் என தெரிவித்துள்ள விஜய், அனைவரும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Advertisement
மேலும், பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என்றும் விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Advertisement