ஹைதராபாத்தில் ஆம்புலன்ஸை திருடி ஓட்டிச்சென்ற திருடன் - விரட்டி பிடித்த போலீசார்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலீசார் விரித்த வலையில் சிக்காமல் ஆம்புலன்ஸை பல கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற திருடனை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
ஹையத் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றை ஓட்டுநருக்கு தெரியாமல் திருடன் ஒருவர் ஓட்டிச் சென்றார். இதுகுறித்து போலீசாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் செல்வதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சோதனை சாவடிகளை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆம்புலன்ஸை நிறுத்த முயன்றனர். ஆனால், போலீசாரின் வலையில் சிக்காமல் அதிவேகமாக சென்ற திருடன், ஆம்புலன்ஸை நிறுத்த முயன்ற போலீஸ் அதிகாரி ஜான் ரெட்டி மீது வாகனத்தை மோதினார்.
இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சுமார் 120 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.