செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆயுதப்படைகளை நவீன போர் படைகளாக மத்திய அரசு மாற்றி வருகிறது : ராஜ்நாத் சிங்

10:58 AM Jan 16, 2025 IST | Murugesan M

புவிசார் அரசியல் மற்றும் தொடர்ந்து மாறிவரும் போரின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளை நவீன போர் படைகளாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

புனேயில் நேற்று நடைபெற்ற ராணுவ தின கொண்டாட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்,

Advertisement

தற்போதைய போர் முறையில் வழக்கத்திற்கு மாறான பயன்பாடு அதிகரித்து வருவதாக எடுத்துரைத்த அவர், ஆயுதப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தினார்.

"மோதல்கள் மற்றும் போர்கள் மிகவும் வன்முறை மற்றும் கணிக்க முடியாததாக இருக்கும் என்று அவர் கூறினார். பல நாடுகளில் அரசு  சார்பற்ற செயற்பாட்டாளர்களின் நடவடிக்கையும் அவர்கள் பயங்கரவாதத்தை நாடுவதும் கவலைக்குரியதாகும் என்று தெரிவித்தார்.

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, எதிர்கால போர்முறைகளில் ஒரு பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார். ராணுவம் முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

Advertisement
Tags :
77th Army Day celebrationFEATUREDindian armyMAINpuneRajnath Singh
Advertisement
Next Article