ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னையில் 34 இடங்களில் ரத்த தான முகாம்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100-வது ஆண்டையொட்டி ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான் என்ற பெயரில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான சமூக பணிகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
"ரன் ஃபார் பிளட் சென்னை மாரத்தான்" என்னும் பெயரிலான இந்த ரத்த தான முகாம் சென்னை முழுவதும் 34 இடங்களில் நடைபெற்றது. திருவல்லிக்கேணியில் உள்ள வைஷ்யா சமுதாய கூடத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
மேலும் முகாம் குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி நாகேந்திரன், 1974-லிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு ரத்த தான முகாமை நடத்தி வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
ஒரே நாளில், ஒரே நேரத்தில் 34 இடங்களில் ரத்ததான முகாம் நடத்தி உலக சாதனைக்கான முன்னெடுப்பை நிகழ்த்தியுள்ளதாக கூறினார். மேலும் ரத்த தான முகாம் மூலமாக சேகரிக்கப்படும் ரத்தம் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.