ஆர்பிஐ சுரங்கப்பாதை மீண்டும் பழுது : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆர்பிஐ சுரங்கப்பாதை, திறக்கப்பட்ட 20 நாளில் மீண்டும் பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே ஆர்பிஐ சுரங்கப்பாதை உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கிளை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அலுவலகங்கள் செல்லவும், தென் பகுதியில் உள்ளவர்கள் வட சென்னை செல்லவும் உதவியாக இருந்து வருகிறது.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தண்ணீர் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாரமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மறுசீரமைப்பு செய்து திறக்கப்பட்ட 20 நாட்களிலேயே சுரங்கப்பாதை மீண்டும் பழுதடைந்துள்ளது.
மேலும், பாலத்தை ஒருவழிப்பாதையாக மாற்றி உள்ளதால் மற்ற பகுதிகளுக்கு செல்ல, பல சாலைகளை சுற்றிச் செல்ல வேண்டி உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.