For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கடல் ஆமைகள் இறப்புக்கு காரணம் என்ன? அரசு விளக்கம் தர தீர்ப்பாயம் உத்தரவு!

04:51 PM Jan 22, 2025 IST | Murugesan M
கடல் ஆமைகள் இறப்புக்கு காரணம் என்ன  அரசு விளக்கம் தர தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை கடலோரங்களில், அரிய வகை கடல் ஆமைகள் இறந்து, கரை ஒதுங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கடலோரங்களில், கடந்த 15 நாட்களில், 350க்கும் அதிகமான கடல் ஆமைகள், கண்கள், கழுத்து வீங்கிய நிலையில் கரை ஒதுங்கியதால், இதுதொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டது.

Advertisement

இந்நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து, ஆமைகள் உயிரிழப்பு குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?, கடல் ஆமைகள் இறப்பை தடுக்க, வழிகாட்டு விதிமுறைகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை என பசுமைத் தீர்ப்பாயம் சரமாரி கேள்விகள் எழுப்பியது.

Advertisement

அப்போது, சென்னை கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய ஆமைகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதால், இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து, கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான காரணம் என்ன? என்பதை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Tags :
Advertisement