ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் லத்தி பயிற்சி அளிக்கப்படுவது ஏன்? - மோகன் பகவத் விளக்கம்!
லத்தி பயிற்சி ஒருவரை உறுதியுடனும், அசைக்க முடியாத வலிமையுடனும் இருப்பதற்கு உதவுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 870 சங்க தொண்டர்கள் குழு, நிகழ்ச்சியில் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் இந்திய இசை மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகள் இணக்கம், நல்லிணக்கம், ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுத் தருவதாகவும்,, நற்செயல்களின் பாதையில் மனிதர்களை அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.
லத்தி பயிற்சி கற்று கொடுக்கப்படுவது ஒருவரை உறுதியுடனும், பொறுமையுடனும், அசைக்க முடியாத வலிமையுடனும் நடக்க தூண்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார். பொதுக்காட்சிக்காகவோ, சண்டைக்காகவோ கற்று கொடுக்கப்படுவது அல்ல லத்தி பயிற்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.