செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டக்கூடாது : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

06:42 PM Jan 23, 2025 IST | Murugesan M

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் சமமான விதிகளை அமல்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டி பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திமுகவின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விளக்கம் அளித்தது.

Advertisement

தொடர்ந்து போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும் என தெரிவித்த உயர்நீதிமன்றம், அதனை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் சமமான முறையில் அமல்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் நீடிப்பார்கள்;  எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல எனவும் காவல்துறையினர் பாரபட்சம் காட்டக்கூடாது; எதிர்காலத்தில் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Advertisement
Tags :
Madras High Court instructsMadras High Court instructs the policeMAINtamil janam tv
Advertisement
Next Article