செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆளுநரை சந்தித்த விஜய்! - அண்ணாமலை வரவேற்பு

06:06 PM Dec 30, 2024 IST | Murugesan M

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுப் பாராட்டி உள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்து தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

Advertisement

இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்.

வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjp k annamalaitn bjptngovernmenttvk vijayCHENNAI NEWStamil nadu newstamil nadu news todaytvk vijay newsVijay met the governor! - Annamalai welcomeவிஜய்MAINDMKஅண்ணாமலைRAJ BHAVAN
Advertisement
Next Article