தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்! : விஜய் வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார்.
Advertisement
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தனக்கு வேதனை அளிப்பதாக கூறிய தவெக தலைவர் விஜய், ஆட்சியாளர்களிடம் முறையிட்டு எந்த பயனும் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து விஜய் மனு அளித்தார்.
இது குறித்து தவெக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.