For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் - தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்

10:05 AM Nov 29, 2024 IST | Murugesan M
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும்   தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், புயலாக மாறி நாளை நவம்பர் 30 ஆம் தேதி பிற்பகல் 1 மணி அளவில் கரையை கடக்க துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த புயல் சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் அருகில் புயலாகவே கரையை கடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணிக்குள் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும்  ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement