ஆவணங்களை கூட பாதுகாக்க முடியாத தமிழக அரசு! : காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி
சிலை திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை கூட பாதுகாக்க முடியாத தமிழக அரசு, கோயில் சிலைகளை எப்படி பாதுகாக்கும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
தமிழகத்தில் 41 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கின் ஆவணங்கள் மாயமான நிலையில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், சிலைகளை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்குகளின் ஆவணங்கள் காவல் நிலையத்திலேயே காணாமல் போன அவலம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது என தெரிவித்துள்ள அவர் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க முடியாத தமிழக அரசு, கோயிலில் உள்ள சிலைகளை எவ்வாறு பாதுகாக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சிலை கடத்தல் வழக்கின் ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.