இசையின் ராக் ஸ்டார் - இசை சாம்ராஜ்ஜியத்தின் இளம் புயல்!
இசைக்கு பல பரிணாமங்கள் உண்டு.. இசையமைப்பாளர்களுக்கு பல படைப்புகள் உண்டு.. தடை அதை உடை என்ற பாடல் வரிகளுக்கு இவர் போட்ட மெட்டு, இளைய சமுதாயத்தை, எழுச்சி பெறச் செய்தது.. ஆம் !!
இசை சாம்ராஜ்யத்தில் அசைக்க முடியாத அவதாரம் எடுத்திருக்கிறார் இந்த இளம் புயல் அனிருத்!!
இசை உலகிற்கு ஒரு சிறிய பொறியாய் வந்தவர், இன்று நெருப்பாய் சுடர்கிறார்...!!
தமிழ் சினிமாவில், தன்னைக்கென தனி வழியை வகுத்தவர். தனித்துவமான இசையால், ரசிகர்களை ரெக்கை கட்டி பறக்க செய்பவர், தான் இந்த REMO !!
கதாநாயகர்களை திரையில் காண்பிக்கும் போதெல்லாம், நமக்குள் கொண்டாடத்தை ஏற்படுத்தியது இவருடைய இசை. மாஸ் பாடல் ஒன்று வேண்டும், என்று கேட்கும் இயக்குனர்களுக்கு - "இந்த மாஸ் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா" என்கிற அளவிற்கு இயக்குனர்களை, தன் கம்போசிங் மூலம் கவர்பவர் அனிருத்!!
பார்ப்பதெல்லாம் பொன்னாக.. என்பது போல, இவர் தொட்ட படங்களெல்லாம் தூள் பிறந்தன.. !! இசையின் ஹீரோயிசத்தை, தன் ரசிகர்களுக்கு திரையில் விருந்தாய் வைப்பவர் !! தன்னுடைய கதாநாயகன் திரையில் தோன்றும் போது, ரசிகர்கள் அவனைக் கொண்டாடும் வகையில், அவர்களில் ஒருவன் போல்.. இசையால் அவர்களின் entry-ஐ இமயத்திற்கு ஏத்தினார்.. !!
கோலி குண்டுகளை கொண்டு விளையாடும் வயதில் இருந்தே, இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். விரல்கள் வளரும் வேளையிலேயே, அவரின் விரலினுள் இசையும் வளர்ந்தது.. தாய் தந்தையரின் சரியான வழிகாட்டலால், தன்னுள் இருந்த உத்வேகத்தை, தனித்துவம் ஆக்கினார்...
why this kolaveri dii - என்ற ஒரு பாடல், தமிழை தாண்டி, இந்தியாவை தாண்டி, சர்வதேச அளவில் சிறகு விரித்தது. தன்னுடைய முதல் படத்திலேயே, தான் யார் என்பதை ஒரு trailer போல அந்த பாட்டின் மூலம் காண்பித்து இருந்தார்..
ஹீரோக்களுக்கு அசத்தலான அறிமுக பாடல்கள் கொடுப்பது, காதல் பாடல்களை வழங்குவது, குத்துப் பாடலை அமைப்பது என, ஒரு template-க்குள் சென்றாலும், தான் இசை அமைக்கும் படங்களுக்கு தன்னையே இயக்குனர் போல் படத்திற்குள் செலுத்தி பின்னணி இசையால் பட்டையை கிளப்புபவர்.. குறிப்பாக,
ஹீரோக்களுக்கு ஹீரோயிசம் கொடுப்பதற்கு பாடல்கள், தீம் மியூசிக்-க்குகள் அமைக்கும் இந்த இசை உலகில், வில்லன்களுக்கு தன் இசையால்.. புது உலகத்தையே உருவாக்கினார்..!!
ஆக்சன் காட்சிகளுக்கு அரங்கம் அதிரும் அதே வேளையில், காதல் காட்சிகளுக்கு தன்னுடைய இசையால், உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பவர்
காதல் பாடல்களை இவர் கம்போஸ் செய்யும் பொழுது, காதலர்களுக்கு ஒரு புது துள்ளலை அது கொடுத்தது. மெலடி, வெஸ்டர்ன், கிளாசிக்கல் என அனைத்திற்கும் அழகு சேர்க்கும் விதமாக.. அசால்ட் செய்தார்..