இண்டி கூட்டணிக்குள் குழப்பம் - தலைமை ஏற்க தயார் என மம்தா அறிவிப்பு!
இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்க தயார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது அந்த கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா கூட்டணியை தான் உருவாக்கியதாக கூறியுள்ளார்.
தற்போது உள்ளவர்களாகல் கூட்டணியை நடத்த முடியாவிட்டால், தான் என்ன செய்ய முடியும்? என்றும் அவர் கூறினார். வாய்ப்பு கிடைத்தால், கூட்டணி சுமுகமாக இயங்குவதை உறுதி செய்வேன் எனவும், இருப்பினும் மேற்கு வங்கத்தை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை எனவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதனிடையே, மம்தாவின் முடிவு குறித்து விமர்சித்துள்ள பாஜக தலைவர் பிரதீப் பண்டாரி ராகுல் காந்தியின் தலைமையை இண்டி கூட்டணியின் எந்தத் தலைவரும் நம்பவில்லை எனவும், ராகுல் காந்தி ஓர் அரசியல் தோல்வி என்றே இண்டி கூட்டணியினர் நம்புவதாகவும் விமர்சித்தார்.