"இந்தியாவுக்கு எதிராக போராட்டம்"! : ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!
இந்திய நாட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் பேச்சுக்கு
பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..!Advertisement
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ராகுல் காந்தி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக காங்கிரஸ் போராடி வருவதாக நினைத்தால் அது தவறு என்றும், தற்போதைய சூழலில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்லாது இந்தியாவுடன் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்திய நாட்டுடன் போராட்டம் நடத்தி வருகிறோம் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் பா.ஜகவை எதிர்க்கிறோம் என்ற பேரில் நாட்டையே எதிர்க்க தொடங்கியுள்ளனர் என்றும், நாட்டை எதிரிப்பது என்பது ஒரு தொழிலாகவே மாறியுள்ளது என்றும் விமர்சித்தார். இதற்கு பின்னால் ஜார்ஜ் சோரஸ் உள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சின் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் வெளியே தெரிய வந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய செய்தி தொடர்பாளர், வினோத் பன்சால், தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர் தீப் சிங் பூரி, ராகுல் காந்தி தனது மனநிலை குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதே போன்று ராகுல்காந்தியின் கருத்துக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.