இந்தியாவுக்கே எதிரானவர்கள் நேரு குடும்பத்தினர்! : நிர்மலா சீதாராமன்
நேரு குடும்பத்தினர் தேசத்துக்கு எதிரானவர்கள் என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தில் பேசிய அவர், நாடு விடுதலை அடைந்த பின்னர் 1949-ம் ஆண்டு மஜ்ரூ சுல்தான்புரி, பால்ராஜ் ஷானி ஆகியோர் தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைத்ததற்காக நேருவால் சிறையில் அடைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி என ஒட்டுமொத்த குடும்பமும் தங்களது குடும்ப நலனுக்காகவே அரசியல் சாசனங்களை திருத்தினார்களே தவிர ஜனநாயகத்தை வலுத்தப்படுத்த அல்ல என்றும் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.
மக்களவையில் 426 எம்.பி.க்களை ராஜீவ் காந்தி கொண்டிருந்த போதிலும் அவர் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரவில்லை என்றும், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்து கொடுமைகளை நினைவூட்டும் வகையில் தங்களது குழந்தைகளுக்கு மிசா என பலரும் பெயர் வைத்ததாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.