செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தியாவும் இந்தோனேசியாவும் நெருக்கமாக இருப்பதை போல் உணர்கிறேன் : பிரதமர் மோடி!

05:05 PM Feb 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இந்தோனேஷியாவில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி அங்குள்ள மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டு பிரமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, முருகனுக்கு அரோகரா" எனக் கூறி உரையை தொடங்கிய அவர், மகா கும்பாபிஷேகத்தில் தானும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார்.

Advertisement

ஜகார்த்தாவிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதைப் போல தன் மனம் உணர்வதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

Advertisement
Tags :
FEATUREDMAINPM ModiI feel like India and Indonesia are close: PM Modi!
Advertisement