செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் சிறந்த உதாரணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

09:55 AM Jan 19, 2025 IST | Sivasubramanian P

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement

காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை தரமணியில் நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மாபெரும் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் இதற்காக இதுவரை 21 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். கை, கால் என உறுப்புகள் பிரிந்தால் உடல் முழுமை அடையாது என்பதுபோல் மாநிலங்கள் பிரிந்தால் பாரதம் ஒன்றிணைய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Advertisement

எனவே பாரதத்தை இணைப்பதில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு முக்கிய பங்காற்றும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டார்.

 

Advertisement
Tags :
ChennaiFEATUREDgovernor rn ravigovernor rn ravi newskasi tamil sangamam 2025MAINRN Ravirn ravi governorrn ravi latest newsrn ravi newsrn ravi tamil naduTamil Nadu - Governor RN RaviTamil Nadu Governortamil nadu governor ravitharamanitn governor rn ravi
Advertisement
Next Article