இந்தியா சிறந்த ஜனநாயக நாடு - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை பேச்சு!
உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த ஜனநாயக நாடாக விளங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் நடைபெற்ற அரசியல் அறிவியல் குறித்த கருத்தரங்கில், அவர் பேசிய கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியாவில் அனைவருக்கு விமர்சிக்க சுதந்திரம் உள்ளதாகவும், இந்தியாவில் அதிகம் விமர்சிக்கப்படும் நபராக பிரதமர் மோடி உள்ளதாகவும் கூறினார்.
பிரதமரையே பழித்துப்பேசும் அளவிற்கு இந்தியாவில் கருத்து சுதந்திரம் உள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கும் நாடாக இந்தியா உள்ளதாகவும் கூறினார்.
சிறுபான்மையின மக்கள் 60-70 நாட்கள் வரை டெல்லியில் போராடியதாகவும், இந்தியாவில் சட்டம் - ஒழுங்கு அந்தந்த மாநிலங்களை சார்ந்ததாக உள்ளதாகவும் கூறினார். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த ஜனநாயக நாடு என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.