விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக போராடியவர் முத்துராமலிங்க தேவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
02:59 PM Oct 30, 2024 IST | Murugesan M
வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப முத்துராமலிங்க தேவரின் செயல்பாடுகள் ஊக்கமளித்து வருவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் தேவரின் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திய சுதந்திரத்துக்காக தனது முழு வாழ்க்கையையும், தேவர் அர்ப்பணித்ததாக தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும், விளிம்புநிலை மக்களின் உரிமைக்காக போராடி நல்லிணக்க தேசத்தை அவர் கட்டியெழுப்பியதாகவும், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப ஊக்கமளித்து வரும் தேவருக்கு இந்தியா இதயபூர்வமாக மரியாதை செலுத்தவதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement