இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன? - திருப்பூரில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் 'சொல்லரங்கம்' நிகழ்ச்சி!
கோவையை தொடர்ந்து திருப்பூரில் நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
சர்வதேச பொருளாதாரத்தால் உலக நாடுகளின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து விவாதிக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன என்ற தலைப்பில் நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொருளாதார வல்லுநர் சோம.வள்ளியப்பன், திறனாய்வாளர் JVC ஸ்ரீராம், இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன், பொருளாதார வல்லுநர் தீனதயாளன், பட்டய கணக்காளர் சேகர் ஆகியோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியில், மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் மது, நிர்வாக ஆசிரியர் தில்லை, செய்தி ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.