மார்கழி மாதம் : சபாக்களில் இசைக்கச்சேரியும், கேண்டீன் உணவுகளும்...- ருசிகர தொகுப்பு!
மார்கழி மாதம் தொடங்கியதும் சபாக்களில் இசைக்கச்சேரிகள் வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது.. அதே அளவிற்கு சபா கேண்டீன் உணவுகளை சாப்பிடவும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்... அதுப்பற்றிய ஒரு ருசீகர தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
மார்கழி மாதம் தொடங்கியதும் கோவில்களில் எப்படி கடவுள்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறதோ அதே அளவிற்கு சபாக்களில் கடவுளை போற்றி இசை மற்றும் நடன கச்சேரிகள் வெகுவிமர்சையாக நடத்தப்படும்..நூற்றாண்டு பழமை கொண்ட சபாக்களை போலவே சபாக்களின் கேண்டீன்களும் பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது... .
கர்நாடக சங்கீதம் , பதரநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் ஒருபுறம் கண்ணுக்கு இதமளிக்க... சபா கேண்டீன்களில் வழங்கப்படும் தடபுடலான உணவு வகைகள் ரசிகர்களின் வயிற்றுக்கு விருந்தளிக்கிறது... குறிப்பாக மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாததால்... சபா கேண்டீன் உணவுகள் ரசிகர்களுக்கு திருமண வீட்டில் உணவு சாப்பிடும் அனுபவத்தை கொடுக்கின்றது....
pineapple rasam , adai pradhaman , Gongura urugai , keera vadai போன்ற ஆரோக்கியம் கலந்த பாரம்பரிய உணவுகள் வெளியூர் மற்றும் வெளிநாட்டத்தவரையும் வெகுவாக கவர்கின்றது...
கடவுள்களின் மாதமாக பார்க்கப்படும் மார்கழியில் அத்தனை சிறப்புகள் இருந்தாலும் சபா கலாச்சாரமும் , பாரம்பரிய உணவுகளும் சென்னைவாசிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கின்றது...