இந்துக்கள் மீதான தாக்குதல்: வங்கதேசத்திடம் கவலை தெரிவித்த இந்தியா!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில், அந்நாட்டிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேரில் கவலை தெரிவித்தார்.
Advertisement
வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இஸ்கான் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் சட்டவிரோதமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் இந்தியா, வங்கதேச உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு ஒருநாள் பயணமாக சென்றார்.
அப்போது அந்நாட்டின் வெளியுறவு செயலர் தௌஹித் ஹுசைனை அவர் சந்தித்து, இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா சார்பில் கவலை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் மிஸ்ரி, இந்தியாவின் கருத்தை வெளிப்படையாகவும் ஆக்கபூர்வமாகவும் எடுத்துரைத்ததாக கூறினார்.