For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இனி அமெரிக்க GPS வேண்டாம் : வருகிறது இந்தியாவின் SPS, அசத்தும் இஸ்ரோ - சிறப்பு கட்டுரை!

09:00 PM Nov 11, 2024 IST | Murugesan M
இனி அமெரிக்க gps வேண்டாம்   வருகிறது இந்தியாவின் sps  அசத்தும் இஸ்ரோ   சிறப்பு கட்டுரை

NavIC என்று அழைக்கப்படும் Navigation with Indian Constellation என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்பாகும். இந்த NavIC அமைப்பு, விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. NavIC என்றால் என்ன ? NavIC ன் சிறப்பம்சங்கள் என்னென்ன ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இப்போதெல்லாம் ஒன்றைக் கண்காணிப்பதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்ட GPS-யை பயன்படுத்துகிறோம். GPS உலகளாவிய கவரேஜை வழங்குகிறது.

Advertisement

1999ம் ஆண்டு, கார்கில் போரின் போது, ஜிபிஎஸ் தரவுகளைத் தேடும் போது இந்திய ராணுவம் பல சவால்களை எதிர்கொண்டது. இக்கட்டான நேரத்தில், அமெரிக்க அரசு GPS-ஐ இந்தியா பயன்படுத்த அனுமதி மறுத்தது.

முக்கியமான சூழ்நிலைகளில் பிற நாடுகளால் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளை எப்போதும் நம்பியிருக்க முடியாது என்பதால் இந்தியா தனக்கென ஒரு பிரத்யேக செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசின் GPS மற்றும் ரஷ்யாவின் GLONASS போன்ற வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து கொண்டது. 2006ம் ஆண்டு, இந்திய அரசு சொந்த உள்நாட்டு செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை உருவாக்க முடிவு செய்தது.

2013ம் ஆண்டு, இந்தியா தனது சொந்த உள்நாட்டு உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் NavIC என்ற பெயரில் வடிவமைத்தது. நேவிக் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு மாலுமி என்று அர்த்தம்.

NavIC மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் தரவு ஒருமைப்பாட்டிற்கு முக்கியமான, அதன் வழிசெலுத்தல் மற்றும் நேரத் தரவுகளின் மீதான மேம்பட்ட கட்டுப்பாட்டை இஸ்ரோ தேசத்துக்கு வழங்கியுள்ளது.

NavIC அமைப்பு, 7 செயற்கைக்கோள்களைக் கொண்ட ஒரு விண்மீன் குழுவாகும். இதில், IRNSS- 1B, IRNSS- 1D, IRNSS- 1E, IRNSS-1F, IRNSS-1G மற்றும் IRNSS-1I என 7 செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது.

இந்த 7 செயற்கை கோள்களில் 3 Geostationary செயற்கை கோள்களும், 4 Geosynchronous orbit செயற்கை கோள்களும் உள்ளன. விண்வெளிப் பிரிவு, தரைப் பிரிவு மற்றும் பயனர் பிரிவு ஆகிய மூன்று நிலைகளில் இந்த NavIC அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) சேவையை வழங்குகிறது. மேலும் துல்லியமான நிலைப்பாடு மற்றும் நேரத் தகவலை வழங்குகிறது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கான SPS என்னும் ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ், ராணுவம் போன்ற முக்கிய அங்கீகரிக்கப்பட்ட துறைகளுக்கு RS கட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் தேடல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு சேவை போன்ற பல்வேறு சேவைகளை NavIC வழங்குகிறது.

NaVIC-ன் SPS சிக்னல்கள் அமெரிக்க GPS, Russian Glonass, EU Galileo மற்றும் Chinese BeiDou GNSS போன்ற பிற உலகளாவிய அமைப்புகளுடன் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் NaVIC அமைப்பில் உள்ள L1 அலைவரிசை, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பல்வேறு தொழில்களில் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது.

ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் கண்காணிப்பு வளையம் போன்ற அணியக்கூடிய தொழில்நுட்ப கருவிகளிலும், இந்த அமைப்பை பயன்படுத்த முடியும். குழந்தை பாதுகாப்பு சாதனங்கள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும் பயன்படுத்த முடியும். வணிக வாகனங்களின் நிகழ்நேர கண்காணிப்பு, போன்ற நடவடிக்கைகளைத் துல்லியமாக கண்காணிக்க, விநியோகச் சங்கிலி நிர்வாகத்தில் NaVIC ஐப் பயன்படுத்த முடியும்.

துல்லியமான இருப்பிடத் தரவு, தேவைப்படும் நிகழ்நேர ரயில் தகவல் அமைப்புகள் போன்ற பொது மக்கள் பாதுகாப்புக்காகவும் NaVICஐப் பயன்படுத்த முடியும். விவசாயிகள் தங்கள் தொழிலை மேம்படுத்துவதற்கும், மீனவர்கள், கடலில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் NaVIC உதவுகிறது, குறிப்பாக சூறாவளி,புயல், போன்ற இயற்கை பேரிடர் குறித்த எச்சரிக்கைகளை நொடிக்கு நொடிக்கு இந்த NaVIC மூலம்பொதுமக்கள் பெற முடியும்.

NaVIC சிக்னல்களை UAV அமைப்புகளில் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயம், விநியோக சேவைகள் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ட்ரோன் செயல்பாடுகளை பயன்படுத்த முடியும். சுற்றுலாப் பயணிகளுக்கு துல்லியமான இருப்பிடத் தகவலை வழங்குவதோடு, அவசர கால சேவைகளுக்கும் இந்த NaVIC ஐ பயன்படுத்த முடியும்.

இந்தியா முழுவதும் 10 மீட்டரை விடவும், 1,500 கிலோ மீட்டர் இந்தியாவைச் சுற்றியுள்ள பகுதிக்கு 20 மீட்டரை விடவும் சிறந்த துல்லியத்தை NaVIC வழங்குகிறது. வருங்காலத்தில், இந்த கவரேஜ் அளவு மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளி ஒழுங்குமுறை மற்றும் ஊக்குவிப்பாளரான INSPACe இன் தலைவரான பவன் கோயங்கா, அடுத்த ஆண்டுக்குள் ஆறு ஜிஎஸ்எல்வி செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு செலுத்தபப்டும் என்றும், இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு டஜன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் விண்வெளிக் கொள்கை மற்றும் நேரடி அந்நிய முதலீட்டு கொள்கை ஆகியவை, இந்திய விண்வெளித் துறைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது என்று பாராட்டிய கோயங்கா, நாட்டுக்கான விண்வெளி சட்டத்தை கொண்டு வருவதே அடுத்த இலக்கு என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரோவின் NaVIC அமைப்பு மூலம் 5.2 பில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சிறிய செயற்கைக்கோள் சந்தையில் அதிக பட்ச பங்கை இந்தியா கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement