இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை - இபிஎஸ், ஓபிஎஸ்க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்கு வரும் டிசம்பர் 23 -ம் தேதி, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்திய தேர்தல் ஆணையம், அதிமுக கட்சி அலுவலகம், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், மற்றும் வழக்கு தொடர்ந்துள்ள சூர்ய மூர்த்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக, அனைத்து தரப்பினரும் வரும் 19 -ம் தேதி எழுத்துப்பூர்மான விளக்கம் அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 23 -ம் தேதி மாலை 3 மணிக்கு , எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் மற்றும் சூரிய மூர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும், தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.