இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!
10:42 AM Dec 09, 2024 IST
|
Murugesan M
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாழைத்தாரை காட்டு யானை தூக்கி சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Advertisement
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைவது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், வேடர் காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் காட்டு யானைகள் ஒன்று புகுந்தது.
அப்போது வீட்டின் முன்பக்க கதவை தள்ளிவிட்டு, வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வாழைத்தாரை மட்டும் காட்டு யானை தூக்கிச் சென்றது. குடியிருப்புவாசிகள் சத்தம் எழுப்பியபோதும் கண்டுகொள்ளாத காட்டு யானை, வாழைத்தாரை தூக்கிச் சென்று அங்கிருந்து வனப்பகுதிக்குள் மாயமானது.
Advertisement
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் வேடிக்கையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Advertisement
Next Article