இராணி வேலுநாச்சியார் வீரத்தை போற்றி வணங்குவோம் - எல்.முருகன் புகழாரம்!
வீரம் செறிந்த இராணி வேலுநாச்சியார் வீரத்தை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "இந்தியாவை சூழ்ந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
நாட்டைக் காக்கும் போரில் பெண்களும் போரிடலாம் என்பதற்கு சான்றாய் விளங்கியதுடன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி தீரமுடன் போரிட்டார். தனது திறன் மிகுந்த படை பலத்துடன் அன்னியர்களை வெற்றி கொண்டு, சிவகங்கைச் சீமையின் முதல் இராணியாக முடிசூட்டப்பட்டார்.
நமது பிற்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் வீரம் செறிந்த வரலாறாய் வாழ்ந்த, இராணி வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தை போற்றி வணங்குவோம்" என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.