இருசக்கர வாகனஓட்டிகளை ஆக்ரோஷமாக துரத்திய யானை!
கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானையிடமிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நூழிலையில் உயிர்தப்பினர்.
Advertisement
கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தின் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மைசூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இங்கு அவ்வப்போது காட்டு யானைகள் சாலையோரம் உலா வருவது வழக்கம். இந்நிலையில் இந்த வழியாக இளைஞர்கள் இருவர் மைசூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலையோரம் இருந்த ஒற்றை காட்டு யானை, திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை ஆக்ரோஷத்துடன் துரத்தி தாக்க முயன்றது.
அப்போது அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் உடனடியாக ஹாரன் அடித்து காட்டு யானையிடமிருந்து இளைஞர்களை காப்பாற்றினார். தற்போது காட்டு யானையிடமிருந்து இளைஞர்கள் நூழிலையில் உயிர்த்தப்பிய காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.