செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இருநாள் பயணமாக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

10:56 AM Jan 24, 2025 IST | Sivasubramanian P

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார்.

Advertisement

ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய தலைமை தேர்தல் நடைபெறவுள்ளது என்றும், அனைத்து மாநிலங்களும் வரும் 29ஆம் தேதிக்குள் மாநில தலைவர் பட்டியலை வழங்க வேண்டும் எனவும் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி 2 நாள் பயணமாக வரும் 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் கிஷன் ரெட்டி, புதிய மாநில தலைவரை தேர்வு செய்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.  சென்னை வரும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மதுரை சென்று அரிட்டாபட்டி மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
AritapattiBJP national leadership electionFEATUREDMAINMinister Kishan ReddyMinister Kishan Reddy tamilnadu visitTamil NaduTamil Nadu BJP President Annamalai
Advertisement
Next Article