இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!
09:24 AM Jan 08, 2025 IST
|
Murugesan M
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
Advertisement
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை. மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது திருவனந்தபுரத்தில் வலியமலா பகுதியில் உள்ள இஸ்ரோவின் லிக்விட் ப்ராபல்ஷன் சிஸ்டம்ஸ் சென்டரில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ராக்கெட் மற்றும் விண்கலம் உந்துதலில் விஞ்ஞானி வி. நாராயணன் மிகவும் அனுபவமுள்ளவர்.
Advertisement
வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரையில் இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement
Next Article