இஸ்ரோ தலைவராக வி. நாராயணன் நியமனம் - அண்ணாமலை வாழ்த்து!
இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்ட வி நாராயணனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வி நாராயணன், புகழ்பெற்ற விஞ்ஞானி, இந்தியாவின் கிரையோஜெனிக் இயந்திர வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியதாக தெரிவித்துள்ளார்.
சந்திரனின் தென் துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்திற்கு நன்றி என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், விண்வெளி ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஆற்றிய அர்ப்பணிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கவுள்ள வி.நாராயணன் பல்வேறு விருதுகளை பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். விண்வெளித் துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள நிலையில், புதிய தலைவரான நாராயணன் தலைமையில் புதிய உச்சங்களைத் தொடும் என குறிப்பிட்டுள்ளார்.