ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய விவகாரம் : சந்துருவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ வெளியீடு!
05:15 PM Feb 02, 2025 IST
|
Murugesan M
ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய வழக்கில் கைதான சந்துருவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisement
அதில், தனது குடும்பத்தினர் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்றும், தனக்கும் எந்த கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் சந்துரு தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடியில் பணம் கட்டாமல் செல்லவே, திமுக கொடியை காரில் கட்டியிருந்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். பெண்கள் சென்றுகொண்டிருந்த கார் தங்களது காரை இடித்துவிட்டதாக எண்ணி தவறுதலாக அவர்களது காரை துரத்தியதாகவும் கைதான சந்துரு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement