For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

01:45 PM Jan 10, 2025 IST | Murugesan M
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்   வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை 11 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் 17-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

பொங்கல் பண்டிகையொட்டி, 11, 12, 14, 15 மற்றும் 16 -ம் தேதி அரசு விடுமுறை என்பதால், 10, 13, மற்றும் 17 - ஆம் தேதி என 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பாளர் உடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் 247 -ஆவது முறையாகவும், கோவையைச் சேர்ந்த நூர் முகமது 47 -வது முறையாகவும், தேர்தல் அதிகாரி மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement