ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனை - தேர்தல் அலுவலர் ஆய்வு!
ஈரோடு கிழக்கு தொகுதி எல்லை பகுதியில் காவல்துறையின் வாகன சோதனையை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் ஆய்வு மேற்கொண்டார்.
ரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனயைடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, அக்ரஹாரம், காளை மாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து செல்லுதல், வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் எடுத்து செல்லுதல் போன்றவை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், காளை மாடு சிலை சந்திப்பில் சோதனை பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வாகனத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான ஆவணங்கள் சரிபார்ப்பு போன்றவை உரிய முறையில் சோதனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
இதனிடையே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் அறைகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.