ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு - மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கமிட்டி தலைவருமான, மதிப்பிற்குரிய திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
சிறு வயதிலிருந்தே அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், முன்னாள் மத்திய அமைச்சராகவும், தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி வந்தார்.
இந்த துயரமான சமயத்தில் அவரைப் பிரிந்து வாடும், அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தாக தெரிவித்துள்ளார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.