உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களின் மனதை புண்படுத்தும் செயல் - நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஆவேசம்!
உதயநிதியின் சனாதனம் பற்றிய பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி நரசிம்ம ராவோ தோலுரித்து காட்டியுள்ளார்.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும், அப்படித் தான் இந்த சனாதனம் எனவும் உதயநிதி கூறியிருந்தார்.
மேலும், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் எனவும் பேசியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி பாஜக எம்.பி நரசிம்ம ராவோ நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்றும், இதுதான் இண்டி கூட்டணியின் செயல் திட்டம் எனவும் விமர்சித்தார்.
அதேப்போல், கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கேவும் பேசியதை சுட்டிக்காட்டிய எம்.பி. நரசிம்ம ராவோ, இவ்வாறு பேசும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவிவியில் இருந்து நீக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.