உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாத ஸ்வாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா!
பிரசித்தி பெற்ற உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாத ஸ்வாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
திருச்சியில் அமைந்துள்ள உய்யக்கொண்டான் திருமலை எனப்படும் திருக்கற்குடி ஸ்ரீ அஞ்சனாட்சி, ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ உஜ்ஜீவநாத ஸ்வாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 14-ஆம் தேதி 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது.
இந்நிலையில், கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளின் சன்னதியில் இருந்து புனிதநீர் அடங்கிய குடங்களை, தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மேளதாளங்கள் முழங்க பிரகாரங்களில் ஊர்வலமாக வந்து யாகசாலை வந்தடைந்தது.
இதனை தொடர்ந்து தீபாராதனை, ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.