செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய குகேஷ் - எல்.முருகன் அண்ணாமலை வாழ்த்து!

10:06 AM Dec 13, 2024 IST | Murugesan M

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய தமிழக வீரர் குகேசுக்கு மத்திய அமைச்சர்  எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்

Advertisement

மத்திய அமைச்சர் எல்.முருகன்  விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதல் முறையாக இளம் வயதில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றிருக்கும் இந்திய வீரர் குகேஷ் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

18 வயதில் நீங்கள் அடைந்திருக்கும் இந்த வெற்றி இலக்கானது, தேசத்தில் உள்ள அனைவரையும் பெருமையடைய செய்திருப்பதுடன், பிற இளைஞர்களுக்கும் செஸ் விளையாட்டின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது. மென்மேலும் பல்வேறு உயரங்களைத் தொட மனதார வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துசெய்தியில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்  சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் சொந்த சதுரங்க நட்சத்திரம், இதுவரை இல்லாத இளைய கிளாசிக்கல் செஸ் உலக சாம்பியாகியுள்ளார். இந்தியாவின் மறுக்கமுடியாத செஸ் கிராண்ட்மாஸ்டருக்கு மகுடத்தில் மற்றொரு மைல்கல் என அண்ணாமலை தெரிவித்துள்ளார.

Advertisement
Tags :
annamalai greetingsDGukeshFEATUREDFIDE World Chess Championship 2024.l murugan greetingsMAIN
Advertisement
Next Article