For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலக முதலுதவி தினம்!

06:26 PM Sep 09, 2023 IST | Abinaya Ganesan
உலக முதலுதவி தினம்

உலக முதலுதவி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2-வது சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது.

முதலுதவியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 2-வது சனிக்கிழமை உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பர் 2-வது சனிக்கிழமையான இன்று (9-ம் தேதி) உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உலக முதலுதவி நாள் என்பது முதலுதவி பயிற்சியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதையும், நெருக்கடியில் அதிக உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அணுகலை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட வருடாந்திர பிரச்சாரமாகும்.

ஒரு நபர் சிறிய அல்லது கடுமையான காயம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டால், நோயாளிக்கு வழங்கப்படும் முதல் மற்றும் உடனடி உதவி 'முதல் உதவி' என்று அழைக்கப்படுகிறது.

Advertisement

ஒவ்வொரு வருடமும் முதலுதவி தினத்திற்கு ஒரு கருப்பொருள் இருக்கும். அதேபோல் இந்த வருட முதலுதவி தினத்தின் கருப்பொருள் "டிஜிட்டல் உலகில் முதலுதவி " என்பதாகும்.

இது தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி மருத்துவ உதிவி செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வை குறிக்கும்.

Advertisement
Tags :
Advertisement