ஊட்டியில் கடும் உறைபனி குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ்! : மக்கள் அவதி
12:58 PM Jan 06, 2025 IST | Murugesan M
நீலகிரி மாவட்டம், உதகையில் உறைபனி பொழிந்து கடும் குளிர் நிலவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
உதகையில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக குறைந்ததால் உறைபனி பொழிவு காணப்பட்டது. இதனால் புல்வெளிகளில் காணுமிடமெல்லாம் வெள்ளை கம்பளம் விரித்ததுபோல் உறைபனி படர்ந்திருந்தது.
Advertisement
உறைபனியால் தேயிலை செடிகள் உள்ளிட்டவை கருகும் நிலையும் ஏற்பட்டது. வாகனங்களிலும் உறைபனி படர்ந்திருந்ததால் அதன் உரிமையாளர்களும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் உறைபனி நிலவும் அளவுக்கு வெப்பநிலை குறைந்து கடும் குளிர் நிலவியதால் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் கடும் அவதியடைந்தனர்.
Advertisement
Advertisement