For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வேண்டுகோள்!

09:31 AM Dec 24, 2024 IST | Murugesan M
ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்   மத்திய அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வேண்டுகோள்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தும் ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டுமென, மத்திய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஆவடியில் உள்ள CRPF வளாகத்தில், மத்திய அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி, 413 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Advertisement

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனித்தனியாக தேர்தல் நடத்துவதற்கு அதிக செலவாகுவதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக அதனை 40 சதவீதம் வரை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சிக்காக மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்த சந்திர சேகர் பெம்மசானி, அதனை சரியாக பயன்படுத்தும் ஊழலற்ற ஆட்சியை மக்கள் தேர்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement