எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்தவர் பாரதியார் - அண்ணாமலை புகழாரம்!
தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்தவர் பாரதியார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த முன்னோடி, மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர்.
பன்மொழி வித்தகர். கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என அனைத்து துறைகளிலும் தொலை நோக்குச் சிந்தனை கொண்டவர்.
பாரதம் உலகின் குருவாக விளங்க வேண்டும் உள்ளிட்ட தேச வளர்ச்சிக்கான பாரதியாரின் ஒவ்வொரு கனவுகளும் இன்று நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில் நனவாகி வருகின்றன. தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழை போற்றி வணங்குவோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.