செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்தவர் பாரதியார் - அண்ணாமலை புகழாரம்!

10:32 AM Dec 11, 2024 IST | Murugesan M

தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்தவர் பாரதியார் என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த முன்னோடி,  மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம் இன்று. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர்.

பன்மொழி வித்தகர். கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என அனைத்து துறைகளிலும் தொலை நோக்குச் சிந்தனை கொண்டவர்.

Advertisement

பாரதம் உலகின் குருவாக விளங்க வேண்டும் உள்ளிட்ட தேச வளர்ச்சிக்கான பாரதியாரின் ஒவ்வொரு கனவுகளும் இன்று நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில் நனவாகி வருகின்றன. தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழை போற்றி வணங்குவோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement
Tags :
annamalaiBharathiyar birth anniversaryFEATUREDMAINTamil Nadu BJP State President
Advertisement
Next Article