செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

என்ஐஏ தொடர்புடைய சில வழக்குகளில் 100 % தண்டனை விகிதம் உறுதி!

04:59 PM Jan 01, 2025 IST | Murugesan M

கடந்த ஆண்டில் என்ஐஏ தொடர்புடைய சில வழக்குகளில் 100 சதவீத தண்டனை விகிதத்தை உறுதிசெய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், 80 வழக்குகளில் தொடா்புடைய 210 போ் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இடதுசாரி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 69 போ் கைது செய்யப்பட்டதாகவும்,  இதே பிரிவில் 12 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு 64 போ் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பயங்கரவாதம், வன்முறை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்டவா்களுக்கு தொடா்புடைய 19 கோடியே 57 லட்ச ரூபாய் மதிப்பிலான 137 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
100 percent conviction rateLeft Wing Terrorism Prevention ActMAINNia
Advertisement
Next Article