சென்னை மாவட்டத்தில் 40.15 லட்சம் வாக்காளர்கள்!
16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில் இன்று அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.
அதில், 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 70 ஆயிரத்து 279 பேர் உள்ள நிலையில், பெண் வாக்காளர்கள் 20 லட்சத்து 44 ஆயிரத்து 323 பேர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 3-ம் பாலின வாக்காளர்கள் ஆயிரத்து 276 பேர் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 642 வாக்காளர்கள் உள்ளனர் எனவும், துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 980 குறைவான வாக்காளர்கள் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.