என்னிடம் சீமான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றார்! : எஸ்.பி வருண் குமார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றதாகவும், அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் திருச்சி எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்.பி வருண் குமார் குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையொட்டி, எஸ்.பி. வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதை நீதிபதி பாலாஜி பதிவு செய்துகொண்டு, விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எஸ்.பி. வருண்குமார், சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த நிலையில், அடுத்த கட்டமாக சிவில் வழக்கு தொடர போவதாக தெரிவித்தார். அத்துடன், சீமான் ஒரு தொழிலதிபர் மூலம் தன்னிடம் மன்னிப்பு கேட்க முயன்றதாகவும், அதற்கு தாம் ஒப்புக்கொள்ளாமல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதாகவும் எஸ்.பி. வருண்குமார் கூறினார்.