என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
04:35 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
"என் இனிய பொன் நிலாவே" பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
"என் இனிய பொன் நிலாவே " பாடலின் பதிப்புரிமையை வைத்துள்ள சரிகமா இந்தியா லிமிடெட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில் வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படத்திற்காக முறையான அங்கீகாரம் இல்லாமல் "என் இனிய பொன் நிலாவே " பாடலை மீண்டும் உருவாக்கியதாகக் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
ஆனால் இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியுடன் தான் பாடலை உருவாக்க மீண்டும் அனுமதி பெற்றதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், இளையராஜா இசையமைத்திருந்தாலும் அதன் உரிமம் இளையராஜாவிடம் இல்லை என உத்தரவிட்டது.
Advertisement